போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
தொழிலாளி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருக்கனூர் போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருக்கனூர் போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி மீது தாக்குதல்
திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரிடம், அதே பகுதி காலனியை சேர்ந்த அங்காளன் என்பவர் கரும்பு வெட்டிய கூலியை கேட்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அங்காளனை சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சிவமணி ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப் படுகிறது.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியையும், அவரது மகன் சிவமணியையும் கைது செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அங்காளனை, சுப்பிரமணி கழுத்தில் கத்திரிக் கோலால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் குத்தியுள்ளார். எனவே சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் பாவாணன் தலைமையில் கட்சி யினர் இன்று மாலை திருக்கனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story