பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்
உருளையன் பேட்டையில் பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவை உருளையன்பேட்டையை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டு குளியல் அறையில் சம்பவத்தன்று குளித்து கொண்டிருந்தார். அப்போது குளியலறையில் உள்ள ஓட்டை வழியாக மர்மநபர் ஒருவர் செல்போன் மூலம் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த தினகரன் (வயது 24) செல்போனில் படம் பிடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story