கீரனூர் அருகே பரிதாபம் வாகனம் மோதி அண்ணன்-தம்பி பலி


கீரனூர் அருகே பரிதாபம் வாகனம் மோதி அண்ணன்-தம்பி பலி
x
தினத்தந்தி 24 Feb 2022 12:07 AM IST (Updated: 24 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே வாகனம் ேமாதி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

கீரனூர்:
அண்ணன்-தம்பி 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 37). ராமலிங்கத்தின் தம்பி ரவிச்சந்திரனின் மகன் முத்துக்குமார் (33). தொழிலாளர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு கீரனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். வத்தனாக் கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் பலி 
ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து  உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வாகனம் மோதி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story