மது போதையில் வேனை பள்ளத்தில் கவிழ்த்த டிரைவர்; 15 பேர் படுகாயம்
மது போதையில் வேனை டிரைவர் பள்ளத்தில் கவிழ்த்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மில் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று வந்தது. புதுப்பட்டி தச்சன் குளம் அருகே வந்தபோது சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,
மது போதையில் வாகனத்தை டிரைவர் ஓட்டியதன் விளைவாக இந்த விபத்து நடந்துள்ளது. போதையில் வாகனங்கனை ஓட்டுபவர்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று தொழிலாளர்களை பாதுகாப்பின்றி அழைத்து செல்லும் டிரைவர்களின் வாகனங்கை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story