பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்ற வாலிபருக்க தர்ம அடி - போலீசார் குவிப்பு


பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்ற வாலிபருக்க தர்ம அடி - போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 1:20 PM IST (Updated: 24 Feb 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கருப்பு தோட்டத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் தொண்டமானூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அங்குள்ள விவசாய நிலம் வழியாக தனியாக நடந்துவந்த அவரை, வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் அந்த பெண் எதிர்பார்க்காத நேரத்தில் வாயில் துணியை அமுக்கி அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு அந்த வாலிபர் தூக்கி சென்று உள்ளார். 

பின்னர் அங்கு வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது அவரது பிடியில் இருந்த தப்பிய அந்த பெண், வாயில் இருந்த துணியை எடுத்து கூச்சலிட்டு உள்ளார்

இந்த சத்தம் கேட்டு  அப்பகுதி மக்கள் கரும்பு தோட்டத்திற்கு ஓடிவந்தனர். அங்கு வாலிபரின் பிடியிலிருந்து பெண்ணை அவர்கள் மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து பானாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாலியல் வன்கொடுமை முயற்சியால் காயமடைந்த இளம்பெண்ணை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதனை அறிந்த திருவண்ணாமலை டி.எஸ்.பி அண்ணாதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  

தனியா வந்த பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்ப்டுத்தி உள்ளது. 

Next Story