தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல்


தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:52 PM IST (Updated: 24 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர். பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர். பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல்
மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது அழகன்குப்பம், வசவன்குப்பம் மீனவ கிராமங்கள். இங்குள்ள 1-வது வார்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் விக்னேஷ், அ.தி.மு.க. சார்பில் பாண்டியன், சுயேச்சையாக வேலு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுயேச்சையாக போட்டியிட்ட வேலு வெற்றிபெற்றார். பின்னர் அவர் தி.மு.க.வில் ஐக்கியம் அடைந்தார்.
இந்தநிலையில் வேலுவின் வெற்றிக்கு தி.மு.க. மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பாபு தான் காரணம் என எண்ணி அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் சந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கம்பு, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரது வீட்டை தாக்கினர். இதை தட்டிக் கேட்ட பாபுவையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.
கோஷ்டி மோதல்
இதற்கிடையே தகவல் அறிந்ததும் பாபுவின் ஆதரவாளர்கள்  பாரத்குமார், தமிழ்மணி, வினோத், அருள்குமாரி உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். பின்னர் இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தேர்தல் முன் விரோதம் காரணமாக         தி.மு.க.,  அ.தி.மு.க.வினர் மோதிக் கொண்டதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story