உக்ரைன் மீது ரஷியா போர் எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,856 உயர்வு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி இருப்பதன் எதிரொலியாக, தங்கம் விலை ஒரே நாளில் நேற்று பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் 13 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உயர்வை நோக்கியே பயணித்தது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்று இருந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கம் விலையில் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலையில் சற்று சரிவை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அதன் விலை சரிந்து கொண்டே வந்து, கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 4-ந்தேதி மீண்டும் உயரத் தொடங்கியது.
அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், ஜனவரி 6-ந்தேதி மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்தை கடந்தது. அதையடுத்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் காணப்பட்டாலும், அவ்வப்போது விலையில் ஏற்றம் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ36 ஆயிரத்து 472 என்ற நிலையில் இருந்து, ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வந்தது.
ரூ.39 ஆயிரத்தை கடந்து விற்பனை
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் தாக்குதல், போர் தொடுக்கலாம் என்ற சூழல் இருந்ததால், கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. மாலையில் மேலும் அதன் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 719-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 752-க்கும் விற்பனையான தங்கம், நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232-ம், பவுனுக்கு ரூ.1,856-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 608-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமும் உயரும் அபாயம்
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலைக்கு போகும் என்று கருதி, பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். மேலும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுதவிர அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மாற்று மதிப்பு சரிந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை உயருகிறது. தொடர்ந்து உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடிக்கும் பட்சத்தில் தினமும் தங்கம் விலை ஏற்றத்திலேயே நீடிக்கும். போர் நிறுத்தப்பட்டாலும், பொருளாதாரம் மீண்டெழ நாட்கள் ஆகும் என்பதால், அதுவரையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story