ரஷியா போர்: உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை,
உக்ரைனில் நேற்று முதல் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என இவரை 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் பதுங்கு குழியிலும் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் போரால் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாடு திரும்புவது குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தங்களை இந்தியா அழைத்து செல்ல விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் சைபர் அட்டாக் நடத்த வாய்ப்பு உள்ளதால் உறவினர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் எனவும் உறவினர்கள் கவலை கொள்ள வேண்டாம், நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்தனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story