மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை கொன்ற மகன்...!


மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை கொன்ற மகன்...!
x
தினத்தந்தி 25 Feb 2022 12:13 PM IST (Updated: 25 Feb 2022 12:14 PM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசினம்பட்டியைச் சேர்ந்தவா் செல்வம்(வயது54) இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார்.

அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட செல்வம் சொந்த ஊருக்க வந்து சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்து செல்வம் நல்ல நிலையில் உள்ளார்.

செல்வத்துக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெளி நாட்டுக்கு சென்று சேத்து வைத்த பணத்தின் மூலம் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து உள்ளார்.

இரண்டாவது மகனான முகுந்தன்(வயது22) என்ஜினியரிங் படிக்க வைத்தார். ஆனால் முகுந்தனுக்கு படிக்கும் போதே குடி பழக்கம் இருந்து உள்ளது. இதனை அவரது தந்தை செல்வம் கண்டித்து உள்ளார். 

இதனால் தந்தை மகனுக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து உள்ளது.  தற்போது படிப்பை முடித்த முகுந்தன் கட்டடவேலை செய்துவருகின்றார். 

சம்பவத்தன்று வேலையை முடித்து வந்த முகுந்தன் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது போதை சரியாக ஏறாத காரணத்தால் கூடுதலாக மது வாங்குவதற்காக தந்தையிடம் பணம் கேட்டு முகுந்தன் தகராறு செய்து உள்ளார்.

இதனை தடுக்கு முயன்ற தனது தாயயை முகுந்தன் தள்ளிவிட்டு உள்ளார்.  பின்னர் இந்த சண்டையை தடுத்து நிறுத்துவதற்காக அருகில் உள்ளவர்களை அழைத்து வருவதற்காக முகுந்தனின் தாய் சென்று உள்ளார்.

இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட முகுந்தன் தான் அணிந்திருந்த பனியனைக் கழற்றி தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார். 

இந்த சம்பவத்தை அறிந்த சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து முகுந்தனை கைது செய்தனர்.

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 


Next Story