போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பேராசிரியைக்கு கொலை மிரட்டல்
அரியாங்குப்பத்தில் கார் கண்ணாடியை உடைத்து பேராசிரியை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பத்தில் கார் கண்ணாடியை உடைத்து பேராசிரியை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கார் கண்ணாடி உடைப்பு
அரியாங்குப்பம் அந்தோணியர் கோவில் வீதியை சேர்ந்தவர் சபரி. இவர் புதுச்சேரியில் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூசைமேரி (வயது 48). தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக உள்ளார்.
சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். இதுதொடர்பாக சூசைமேரி அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த பகுதியை சேர்ந்த டேனி, ஏசுதாஸ் ஆகியோர் உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சூசைமேரி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இந்த நிலையில் நேற்று சூசைமேரியின் வீட்டுக்கு வந்த டேனி, ஏசுதாஸ் ஆகியோர் எங்களை போலீசில் புகார் செய்கிறாயா? என்று கூறி தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரது கணவர் சபரியையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சூசைமேரி மீண்டும் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை மிரட்டல், கார் கண்ணாடியை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story