காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை


காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2022 11:39 PM IST (Updated: 25 Feb 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் கைது
காரைக்கால் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் 17 பேர் என 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்களது குடும்பத்தினர், முதல்-அமைச்சர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்களை உடனடியாக மீட்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரங்கசாமி கடிதம்
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் கோட்டுச்சேரிமேடு பகுதியில் வசிக்கும் வீரமணி, செல்வமணி, திலீபன், ரமேஷ்,   சுரேஷ் ஆகிய 5 மீனவர்களும், தமிழ்நாடு நாகப்பட்டினம் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 23-ந்தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த 5 மீனவர்களையும், தமிழகத்தை சேர்ந்த 17 மீனவர்களையும்             மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட எந்திர படகுகளையும் உடனடியாக விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story