பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
வானூர் அருகே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
வானூர் அருகே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாலியல் தொல்லை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 26). வேன் டிரைவர். இவர் அதே பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தாயார் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்போில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
மாணவி தற்கொலை
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இன்று அவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி கல்குவாரி குட்டையில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story