கடல் அலையில் சிக்கி மீனவர் பலி


கடல் அலையில் சிக்கி மீனவர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2022 12:04 AM IST (Updated: 26 Feb 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

அாியாங்குப்பத்தில் மீன்பிடிக்கும் போது கடல் அலையில் சிக்கி மீனவர் பலியானார்.

அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று சின்னவீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதியில் வலைவீசி மணிகண்டன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் திடீரென அவர் இழுத்து செல்லப்பட்டார். தண்ணீரில் தத்தளித்த அவரை அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது பற்றி தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story