உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள சென்னையில் கட்டுப்பாட்டு அறை
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நாளில் 1,500 செல்போன் அழைப்புகள் வந்துள்ளன.
சென்னை,
உக்ரைன்-ரஷியா இடையே போர் மூண்டுள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் படிக்க சென்ற இந்திய மாணவர்களை பாதுகாப்பு தேடி பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் ஏதுவாக சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு இருக்கிறது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமையில் அங்கு சுமார் 20 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற தொடங்கி இருக்கின்றனர்.
1,500 செல்போன் அழைப்புகள்
இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்கு மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 மற்றும் 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 என்ற எண்களும், nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் உக்ரைனில் இருந்து மட்டும் சுமார் 1,500 தொலைபேசி மற்றும் செல்போன் அழைப்புகள் வந்திருப்பதாகவும், 3 ஆயிரம் மின்னஞ்சல்கள் மூலம் மாணவர்கள் உதவி கோரி இருப்பதாகவும், நேரடியாக மாணவர்களின் பெற்றோர் சிலரும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து உதவி கோருவதாகவும் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.
‘உக்ரைனின் எல்லையோரப் பகுதிகளில் சிக்கியிருக்கும் மாணவர்களை, அண்டை நாடுகளான போலந்து, ருமேனியாவுக்கு செல்ல அறிவுறுத்தி இருக்கிறோம். அதற்கேற்றாற்போல் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இதுபோல் மாணவர்கள் வரும் விவரங்களை கொடுத்து வருகிறோம். அவர்கள் நாளை (இன்று) அங்கு சேருவார்கள். மாணவர்கள் அங்கு பாதுகாப்பாக வந்தவுடன் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள். ஆனால் உக்ரைனின் தலைநகரத்தில் இருக்கும் மாணவர்களை மட்டும் அங்கேயே பாதுகாப்பாக தங்க சொல்லி இருக்கிறோம்' என்று ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.

Related Tags :
Next Story