ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது...!
விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டு உள்ளார்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு வி.ஏ.ஓ-ஆக பணியாற்றி வருகின்றார்.
வி.ஏ.ஓ செந்தில்நாதனை அல்லிவிளாகத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பர் பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக அனுகியுள்ளார். பட்டா மாற்றம் செய்ய வி.ஏ.ஓ செந்தில்நாதன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். புகாரின் போரில் வழக்கு பதிவு செய்த போலீசார், செல்வராஜிடம் 5 ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து உள்ளனர்.
பின்னர் இந்த பணத்தை வாங்கி வி.ஏ.ஓ செந்தில்நாதனை அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story