கடித்த பாம்பை பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு ...!


கடித்த பாம்பை பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு ...!
x
தினத்தந்தி 26 Feb 2022 12:32 PM IST (Updated: 26 Feb 2022 12:32 PM IST)
t-max-icont-min-icon

கடித்த பாம்பை விரட்டிப் பிடித்து அதை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது

போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.  போச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் வேலை பார்த்த போது அவரை பாம்பு கடித்துள்ளது. 

கடித்த பாம்பை விரட்டிப் பிடித்து அதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த மனோகரனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story