உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு...!
உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் மின் கோபுரம் அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி தலைவர் ஆறுமுகம் என்பவர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆறுமுகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Related Tags :
Next Story