பொது இடத்தில் மது அருந்திய 50 பேர் சிக்கினர்
புதுச்சேரியில் பொது இடத்தில் மது அருந்திய 50 பேரை போலீசார் மடக்கி பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் பொது இடத்தில் மது அருந்திய 50 பேரை போலீசார் மடக்கி பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வார இறுதிநாட்களில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
புதுவையில் உள்ள சுற்றுலா தலங்களான கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் தகராறு செய்கின்றனர். இதுதொடர்பாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா உத்தரவின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் உப்பளம் புதிய துறைமுகம், பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு திடீர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story