கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.
11 பேருக்கு தொற்று
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,518 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 11 பேருக்கு தொற்று உறுதியானது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 14 பேர், வீடுகளில் 155 பேர் என 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 42 பேர் குணமடைந்துள்ளனர்.
2 முதியவர்கள் பலி
கடந்த சில நாட்களாக உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில், தற்போது 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். அதாவது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டியார்பாளையம் ஜெயாநகரை சேர்ந்த 62 வயது முதியவர், கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,962 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 0.72 சதவீதமாகவும், குணமடைவது 98.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 410 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 404 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 61 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 88 ஆயிரத்து 474 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story