சென்னை புத்தக கண்காட்சிக்கு வைரமுத்து இன்று வருகிறார் - தன்னுடைய படைப்புகளில் வாசகர்களுக்கு கையொப்பம் இடுகிறார்


சென்னை புத்தக கண்காட்சிக்கு வைரமுத்து இன்று வருகிறார் - தன்னுடைய படைப்புகளில் வாசகர்களுக்கு கையொப்பம் இடுகிறார்
x
தினத்தந்தி 27 Feb 2022 5:38 AM IST (Updated: 27 Feb 2022 5:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு வைரமுத்து இன்று வருகிறார். அவர் தன்னுடைய படைப்புகளை வாங்கும் வாசகர்களுக்கு கையொப்பம் இடுகிறார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்துக்கு இந்த ஆண்டு (2022) பொன்விழா ஆண்டாகும். அவருடைய முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972-ல் வெளிவந்தது. இதுவரை அவர் 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வைரமுத்து வின் 17 புத்தகங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.

வைரமுத்துவின் இலக்கிய பொன்விழா இலச்சினையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

‘வைரமுத்து இலக்கியம் 50’-ஐ வாசகர்களோடு கொண்டாட வைரமுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகிறார். வாசகர்கள் வாங்கும் அவருடைய படைப்புகளில் கையொப்பமிடுகிறார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைத்துள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொல்பொருள் கண்காட்சி அரங்கின் அருகில் திறந்தவெளியில் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. கையொப்பமிட்டு முடிந்ததும் புத்தக அரங்குகளில் வாசகர்களோடு வைரமுத்து வலம் வருகிறார்.

பபாசி தலைவர் வைரவன், செயலாளர் முருகன், பொருளாளர் குமரன், நிர்வாகிகள் பழனி, மைலவேலன், புருசோத்தமன், மெய்யப்பன், சுப்ரமணியன் மற்றும் பதிப்பாளர்கள் வேடியப்பன், ஒளிவண்ணன், சிராஜ் உள்ளிடோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Next Story