கடைகளில் போலி டீத்தூள், சலவை பவுடர் விற்பனை
புதுவையில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்த 3 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுவையில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்த 3 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலி டீ தூள்
புதுச்சேரி பெரிய மார்க்கெட், ரங்கபிள்ளை வீதி, பாரதிவீதியில் செயல்படும் 3 கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலி டீத்தூள் மற்றும் சலவை பவுடர் விற்பனை செய்வதாக அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகரான பெங்களூருவை சேர்ந்த நயன்தாரா டெமிக்கு புகார் சென்றது.
இதனை தொடர்ந்து அவர் தனது குழுவினருடன் புதுவை வந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று அந்த பொருட்களை விலைக்கு வாங்கி பார்த்தார்.
அப்போது அந்த 3 கடைகளிலும் தங்களது நிறுவனத்தின் பெயரில் போலியான லேபிள் ஒட்டி டீத்தூள் மற்றும் சலவை பவுடர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த பொருட்களுடன் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீத்தூள் மற்றும் சலவை பவுடர் இருப்பது தெரியவந்தது. உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர்களான மாணிக்கம், ஜாபர் அலி, பாலமுருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story