ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. சுப்பையா சென்னையில் மரணம்


ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. சுப்பையா சென்னையில் மரணம்
x
தினத்தந்தி 28 Feb 2022 12:25 AM IST (Updated: 28 Feb 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. சுப்பையா சென்னையில் மரணம்.

சென்னை,

தமிழக காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுப்பையா. அவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அவரது பிறந்த ஊராகும். 1978-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்த அவர் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். அவர் அப்போதைய செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் 5 ஆண்டுகள் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை வில்லிவாக்கம் மயானத்தில் அவரது உடலுக்கான இறுதி சடங்குகள் நேற்று நடந்தன.

Next Story