சினிமா டைரக்டர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு


சினிமா டைரக்டர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு
x
தினத்தந்தி 28 Feb 2022 2:48 AM IST (Updated: 28 Feb 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

சினிமா டைரக்டர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு.

சென்னை,

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நேற்று தேர்தல் நடந்தது. வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். தலைவர் பதவிக்கு பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள். காலை ஓட்டுப்பதிவு தொடங்கி மாலையில் முடிந்தது. பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் ஆ.கே.செல்வமணி 955 ஓட்டுகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்றார்.

Next Story