புத்தக கண்காட்சியில் அலைமோதிய வாசகர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்
சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் விடுமுறை நாளான நேற்று வாசகர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
விடுமுறை தினமான நேற்று புத்தக கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் குவிந்தனர். இதனால் கண்காட்சி வளாகமே வாசகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
புகைப்பட கண்காட்சி
சுதந்திர போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள் மற்றும் அவர்களது தியாகத்தை பொதுமக்கள் உணரும் வகையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் புத்தக கண்காட்சி வளாகத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து புத்தக கண்காட்சி வளாகத்தில் ஓவிய போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ‘பபாசி’ தலைவர் எஸ்.வயிரவன், துணைத்தலைவர் பெ.மயிலவேலன், செயலாளர்எஸ்.கே.முருகன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கவிஞர் வைரமுத்து
அதனைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னை புத்தக கண்காட்சிக்கு கவிஞர் வைரமுத்து வந்து வாசகர்கள் வாங்கும் அவரது படைப்புகளில் கையெழுத்திட்டு கொடுத்தார்.
அவரை பார்க்க ரசிகர்கள் பெருந்திரளாக குவிந்தனர். அப்போது, ‘கடைசி வாசகன் நகரும் வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன். எனவே பொறுமை காத்திடுங்கள்’ என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். பின்னர் காத்திருந்த வாசகர்கள் அனைவரது புத்தகங்களிலும் கையெழுத்திட்டார். அதனைத்தொடர்ந்து புத்தக கண்காட்சிக்கு சென்று ஒவ்வொரு அரங்குகளாக பார்வையிட்டார்.
‘தினத்தந்தி’ அரங்கில்...
‘தினத்தந்தி’ அரங்கில் ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து படித்து பார்த்தார். அங்கு புத்தகங்கள் வாங்கி கொண்டிருந்த வாசகர்களை சந்தித்து, அவர்களது வேண்டுகோளுக்கேற்ப அந்த புத்தகங்களில் கையெழுத்திட்டு வழங்கினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் அவர் கூறுகையில், ‘‘ஒரு இலக்கியத்துக்கு இரண்டே இரண்டு முனைகள்தான். ஒன்று படைப்பாளன். மற்றொன்று படிப்பாளன். படைப்பாளன் என்ற ஒரு முனையில் இருந்து, படிப்பாளன் என்ற இன்னொரு முனைக்கு கடத்தப்படுவதுதான் இலக்கியம். ஒரு இலக்கியம் எனப்படுவது மக்களுக்காக எழுதப்படுவது. அந்த இலக்கியம் மக்களை சென்றடைவதுதான் உச்சம். தமிழ் பெருமக்கள் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள். எனது இலக்கிய பொன்விழாவை அவர்களுடன் கொண்டாடுவதுதான் சாலச்சிறந்தது. அதற்கு நல்வாய்ப்பாக இந்த புத்தக கண்காட்சி அமைந்தது’’ என்றார்.
விடுமுறை நாளான நேற்று சென்னை புத்தக கண்காட்சியில் 88 ஆயிரத்து 400 பேர் வந்தனர் என ‘பபாசி’ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story