புத்தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆதார நிதி விண்ணப்பிக்க 11-ந் தேதி கடைசி நாள்


புத்தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆதார நிதி விண்ணப்பிக்க 11-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 28 Feb 2022 3:34 AM IST (Updated: 28 Feb 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

புத்தொழில் தொடங்க தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் ஆதார நிதி பெற விண்ணப்பிக்க வருகிற 11-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு, உலகளாவிய அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க செயலகம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் தொடக்கநிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை தகுதிவாய்ந்த நடுவர்குழு மூலம் தேர்வு செய்து ஆரம்பகட்ட ஆதார நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

உதவியாக இருக்கும்

ராமேசுவரம் அருகில் உள்ள தாமரைக்குளம் எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் நிதிசார் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். புத்தொழிலுக்கான ஆதார நிதியான ரூ.10 லட்சத்தை பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஏற்கனவே 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஆதார நிதி 23.12.2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

3-வது முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதார நிதி வழங்கப்பட உள்ளது. இந்த நிதி தொடக்கநிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் தம்மை நிலைப்படுத்தி கொள்ளவும், வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இது, புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக சிவராஜா ராமநாதன் பொறுப்பேற்ற பின்பு மேற்கொண்ட முதல் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.

மானியத்தொகையை பெற விரும்பும் நிறுவனங்கள் www/startuptn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளை பற்றியும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். வருகிற 11-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story