தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு
x
தினத்தந்தி 28 Feb 2022 10:52 AM IST (Updated: 28 Feb 2022 10:52 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.4,813 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,904-ல் இருந்து ரூ.38,504 ஆக உயர்ந்துள்ளது

இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-ல் இருந்து ரூ.70.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.69 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்துள்ளது. 

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story