தமிழகத்தை விட்டு வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


தமிழகத்தை விட்டு வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 11:57 AM IST (Updated: 28 Feb 2022 11:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை விட்டு வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை 5வது சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்துள்ளது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். 

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர். குறைந்த கட்டணம் வசூலிக்கக்கூடிய நாடுகளில் கல்வி பயில செல்வது வழக்கம் தான்.

உக்ரைனில் உள்ள மாணவர்களை தமிழகம் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கிறது. உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story