முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...
முன்னா் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை,
முன்னா் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வகையில சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திமுகவின் செயலுக்கு எதிராக கண்டம் தெரிவித்தார். இதில் ஏராளமாக அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை திடீர் என்று மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தூக்கி சென்று தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர்.
இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏகள் கலந்து கொண்டு ஜெயக்குமார் கைதுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story