தமிழ்நாட்டில் 3,000 ஆண்டுகளாக வேறு எந்த கொள்கைகளையும் திணிக்க முடியவில்லை - ராகுல் காந்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார் என ராகுல் காந்தி பேசினார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான ராகுல் காந்தி பேசியதாவது: - இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும். ஸ்டாலினுக்கு 69 -வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார்... எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்
ஒரு அருமையான புத்தகத்தை வழங்கிய என் அண்ணன் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போது மகிழ்ச்சியான விஷயம் தான். நாடாளுமன்றத்தில் என்னை அறியாமல் பத்திரிகையாளர்களிடம் 'நான் தமிழன்' என்று கூறினேன்.எனது ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது, நான் தமிழன் என்று சொல்லி கொள்ள அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. தமிழ்நாடு வருவது எனக்கு எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது; இதனை நான் மேலோட்டமாக சொல்லவில்லை, மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார்.பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் பொருள் புரியாமல் பேசுகிறார். எல்லா மாநிலங்களை பற்றியும் புரிந்து கொள்ளாத தன்மையில் தான் பிரதமர் மோடி இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள முடியாத சூழல் உள்ளது. இந்திய எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க நீங்கள் யார்? மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கற்பனையான உலகில் பாஜக வாழ வேண்டாம். அவர்களை எதிர்க்க எங்களுக்கு தெரியும். நீட் விலக்கு வேண்டுமென தமிழ்நாடு தொடர்ந்து கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள்மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள் தமிழ்நாடு என்பது வெறும் இரண்டு வார்த்தைகள் அல்ல, 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. தமிழ்நாட்டில் 3,000 ஆண்டுகளாக வேறு எந்த கொள்கைகளையும் திணிக்க முடியவில்லை” என்றார்.
Related Tags :
Next Story