மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை: கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  டிரைவருக்கு 10 ஆண்டு சிறை: கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 9:12 PM IST (Updated: 28 Feb 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.

கோவை, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  உள்ள ஆழியாறு கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஷ், 17 வயது மாணவியை காதலித்து உள்ளார். அந்த மாணவி அப்போது பிளஸ்-1 படித்தார். அப்போத்து அந்த மாணவியை ஆசை வார்த்தை  கூறி விக்னேஷ் பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் மாணவியை வால்பாறை  உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விக்னேஷ் அந்த மாணவியை  பழனிக்கு அழைத்து சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 18.6.2019 அன்று ஆழியாறு போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  டிரைவர் விக்னேசை கைது செய்தனர்.  மேலும் அவர் மீது குழந்தை திருமண தடுப்பு  சட்டம், போக்சோ, கடத்தல் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இதுகுறித்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த  கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் விக்னேஷ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பளித்தார்.

Next Story