ஆரோவில் உதயமான தினம் வெளிநாட்டினர் தீ மூட்டி கூட்டு தியானம்
ஆரோவில் உதயமான தினம் வெளிநாட்டினர் தீ மூட்டி கூட்டு தியானம்
புதுச்சேரி
அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்சாவால் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைக்கப்பட்டது. இந்த நகரை, எந்த ஒரு நாட்டினரும் எந்த ஒரு மதத்தினரும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில் அனைவருக்கும் பொதுவான இடமாக இருக்க வேண்டும் என்று அன்னை விரும்பினார்.
ஆரோவில் நகரில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று ஆரோவில் நகரின் 54-வது உதயதினம் ஆகும். இதையொட்டி அதிகாலை முதலே வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என ஏராளமானோர் ஆரோவில் மையப்பகுதியில் உள்ள மாத்ரி மந்திர் அருகே ஆம்பி தியேட்டர் எனும் திறந்தவெளி மைதானத்தில் கூடினார்கள். சூரிய உதயத்தின் போது அப்பகுதியில் தீயை மூட்டி அவர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
===
Related Tags :
Next Story