மருத்துவ கல்லூரி மாணவி எலி மருந்து தின்று தற்கொலை
எலி மருந்து தின்று மருத்துவ கல்லூாி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
எலி மருந்து தின்று மருத்துவ கல்லூாி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவ கல்லூரி மாணவி
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியின் நலத்துறை அதிகாரி மல்லா கிருஷ்ணா ராவ் (வயது 59). இவரது பூர்வீகம் ஆந்திரா. இவரின் மனைவி வாணிஸ்ரீ (49). இவர்களது மகன் பிரவீன் (26), மகள் மல்லா ரத்னா மவுலிகா.
புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து மல்லா ரத்னா மவுலிகா எம்.டி. இறுதியாண்டு படித்து வந்தார்.
தற்கொலை
கடந்த சில மாதங்களுக்கு முன் மல்லா ரத்னா மவுலிகா, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் படிக்கும் கல்லூரியில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மல்லா ரத்னா மவுலிகா எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை சக மாணவிகள் மீட்டு சிகிச்சைக்காக பயிலும் மருத்துவ கல்லூரியிலேயே அனுமதித்தனர். பின்னர் அவரை பெற்றோர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மல்லா ரத்னா மவுலிகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story