மது குடித்த 32 பேர் கைது
பொது இடங்களில் மது குடித்த 32 பேரை போலீசார் கைது செய்தனர்
சுற்றுலா தலமான புதுவையில் பொது இடங்களில் சிலர் மது குடித்துவிட்டு பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதையடுத்து பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் மது அருந்துவோரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இந்தநிலையில் லாஸ்பேட்டை-3, கோரிமேடு-4, சேதராப்பட்டு-5, மேட்டுப்பாளையம்-6, ரெட்டியார்பாளையம்-5, நெட்டப்பாக்கம்-2, திருபுவனை-1, திருக்கனூர்-1, காட்டேரிக்குப்பம்-3, மங்கலம்-1, பாகூர்-1 என மொத்தம் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story