திராவிட மாடல் இந்தியாவை ஒன்றுபடுத்தும் சக்தியாக திகழலாம் கவிஞர் வைரமுத்து பேச்சு
திராவிட மாடல் இந்தியாவை ஒன்றுபடுத்தும் சக்தியாக கூட நாளை திகழலாம் என்று வைரமுத்து பேசினார்.
சென்னை,
இந்தியா தனது புருவங்களை உயர்த்தி பார்க்கும் மேடையாக இதை பார்க்கிறேன். தேசிய அடையாளத்துடன் தனது சுயசரிதையை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். நிலாக்களையும், நட்சத்திரங்களையும் ஒரே மேடையில் அமர வைத்து இருக்கிறார் நம்முடைய முதல்-அமைச்சர். ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். செயல்படுவது, சிந்திப்பது, களமாடுவது அவரது பிறவிக்குணம். அண்ணா, கருணாநிதி வேகம் அவருக்கு இருக்கிறது.
9 மாதங்களில் இந்தியாவே தமிழகத்தை நிமிர்ந்து பார்க்க வைத்து இருக்கிறார். அவ்வளவு சாதனைகளை செய்து இருக்கிறார். யாருக்கு கொள்கை பிடிவாதம் இருக்கிறதோ அவருக்குதான் சாதிக்க தெரியும். அந்த கொள்கை பிடிவாதம் எப்படி வந்தது என்பது இந்த நூலில் சாட்சியாக இருக்கிறது.
திராவிட மாடல்
திராவிட மாடல் என்பது ஒரு நூற்றாண்டு இயக்கம் கட்டி காத்த கொள்கையின் பிழிந்த வடிவம். திராவிட மாடல் என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள்.
எங்கள் சமூக நீதி, சுயமரியாதை, பொருளாதாரம், சமூகம் இந்த நான்கும் சமத்துவமாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். இந்த திராவிட மாடல்தான் இந்தியாவை ஒன்றுபடுத்தும் சக்தியாக கூட நாளை திகழலாம்.
ஓடிக்கொண்டே இருங்கள்
தென்னகத்தில் தோற்றுவித்த இந்த செய்தி ஏன் வடநாட்டில் ஆளக்கூடாது, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டு மாடல், சமூக மாடல் என்று கூட நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் சமத்துவம் பரவுவதற்கு இந்த திராவிட மாடலை கட்டி அமைத்து கொடுத்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஓடிக்கொண்டே இருங்கள். உங்கள் எழுத்து தொடர வேண்டும். 6 பாகம் நெஞ்சுக்கு நீதி எழுதினார் கருணாநிதி, நீங்கள் 7 பாகம் எழுத வேண்டும். இயற்கை, நிறைந்த சக்தியை தரட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story