நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி ;அலுவலக உதவியாளர் கைது


நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி ;அலுவலக உதவியாளர் கைது
x
தினத்தந்தி 1 March 2022 11:40 AM IST (Updated: 1 March 2022 11:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை அலுவலக உதவியாளர் கத்தியால் குத்த முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் 4 வது குற்றவியல் நடுவர் நீதிம்னற நீதிபதியாக  பொன். பாண்டியன்  உள்ளார். இவரது அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில்  இடமாற்றம் வழங்கபட்டது.

இந்த நிலையில் இன்று  காலை சேலம் ஒருங்கிணைந்த நீதிம்னற வளாகத்தில்  பிரகாஷ் நீதிபதி பொன். பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று உள்ளார்.  உடனடியாக அங்கிருந்தவர்கள்  அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.

தனது இடமாறுதலுக்கு நீதிபதி பொன்.பாண்டியன் தான் காரணம் என எண்ணத்தில் இந்த செயலில்  பிரகாஷ் ஈடுபட்டதாக் தகவல் வெளியாகி உள்ளது.     

Next Story