பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம்; 3 மாணவிகளுக்கு தொடர்பு அதிர்ச்சி தகவல்


பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம்;  3 மாணவிகளுக்கு தொடர்பு அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 1 March 2022 1:46 PM IST (Updated: 1 March 2022 1:46 PM IST)
t-max-icont-min-icon

வழக்கில் வடபழனி மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் 3 மாணவிகளை தேடிவருகின்றனர்

சென்னை:

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 13 வயது மாணவி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் வசந்த்கிரிஷ் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி அவருடன் உல்லாசமாக இருந்ததும் பின்னர் தனது நண்பர்களுக்கு மாணவியை விருந்தாக்கியதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில்  வடபழனி மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மருத்துவ மாணவரான வசந்த் கிரிஷ் மாணவியை தனது காதலி என்றும் பாராமல் நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ்குமார், தனியார் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா, கல்லூரி மாணவர் விஷால் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களுடனும் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தி உள்ளார்.

இது போன்ற நேரங்களில் மாணவியை முழு போதைக்கு அடிமையாக்கி 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெற்றோர் விசாரித்த பின்னரே அவர் கூட்டு பலாத்காரம் மூலமாக சீரழிக்கப்பட்டது அம்பலமானது.

இது தொடர்பாக கைதான வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 கல்லூரி மாணவிகளுக்கும், ஒரு பள்ளி மாணவிக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிகளில் ஒருவரான கல்லூரி மாணவர் விஷாலின் காதலிக்கு இந்த விவகாரத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திருவொற்றியூரை சேர்ந்த அந்த கல்லூரி மாணவியும் அவரது தோழியான இன்னொரு கல்லூரி மாணவியும் பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தில் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

விஷாலின் காதலியான கல்லூரி மாணவி மூலமே மருத்துவ மாணவரான வசந்த்கிரிசுக்கு பள்ளி மாணவி அறிமுகமாகி இருக்கிறார்.

இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் வசந்த்கிரிஷின் நண்பர்கள் உட்பட பலருடன் மாணவிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வசந்த் கிரிஷ் மாணவியை காதலிப்பது போல நடித்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார்.

இதனை நம்பிய மாணவியும் வசந்த்கிரிசின் வார்த்தைகளுக்கு அடிமையாகி உள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று மாணவிக்கு போதை பொருள் கொடுத்து அவருடன் உல்லாசம் அனுபவிப்பதை வழக்கமாக்கினார்.

வசந்த் கிரிஷ் ஒரு ஆடம்பர பேர்வழியாக இருந்துள்ளார். வார இறுதி நாட்களில் தனது நண்பர்களான துணை நடிகர் சதீஷ்குமார், விஷால் பிரசன்னா மற்றும் பெண் தோழிகளுடன் பப்புக்கு சென்று ஆட்டம்-பாட்டம் என உல்லாசமாக பொழுதை கழித்து உள்ளார்.

இந்த நிலையில்தான் மாணவி வசந்த்கிரிசின் காதல் வலையில் சிக்கி இருக்கிறார்.

பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் போதைக்கு அடிமையாகி வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்களின் காமபசிக்கும் இரையாகி இருக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக வசந்த்கிரிஷ் தனது நண்பர்களுடன் மாணவியை மிரட்டி வெளிஇடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அனைவரும் மாணவியுடன் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இப்படி வசந்த்கிரிசுக்கு பயந்து “பப்”க்கு சென்ற மாணவி நள்ளிரவு 2.30 மணிக்கு பின்னர் தான் வீடு திரும்பி உள்ளார். போதை பழக்கம் காரணமாக பல நாட்கள் பள்ளிக்கு செல்லாமலும் மாணவி இருந்துள்ளார்.

இதுபோல வசந்த் கிரிஷ் தனது நண்பர்களோடு பல இடங்களுக்கு மாணவியை ஏமாற்றி அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது அறைக்கு மாணவியை அழைத்து சென்று போதைக்கு அடிமையாக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதன்பிறகு பேராசிரியர் பிரசன்னாவுடன் உல்லாசமாக இருக்க மாணவியை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர்.

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் 2 கல்லூரி மாணவிகளும், அவரது தோழியான பள்ளி மாணவி ஒருவரும் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அவர்களது பெயர் விவரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இந்த வழக்கில் 3 பேரையும், தலைமறைவு குற்றவாளிகளாக போலீசார் சேர்த்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவியை பெண் என்றும் பாராமல் 3 மாணவிகளும் சேர்ந்து அவரது மனதை மாற்றி தங்களது ஆண் நண்பர்களோடு உல்லாசமாக இருக்க வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலம் மாணவியின் வாழ்க்கை திசைமாறி சின்னபின்னமானதற்கு இந்த 3 மாணவிகளும் முக்கிய காரணம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story