முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் தலைவர்கள்- பிரமுகர்கள் வாழ்த்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் தலைவர்கள்- பிரமுகர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 1 March 2022 1:58 PM IST (Updated: 1 March 2022 1:58 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னையில் வாழ்த்து அரங்கம், கவி அரங்கம், கருத்தரங்கம், இசை அரங்கம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதே போன்று மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, “தங்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நான் பாடுபடுவேன்” என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெர்வித்து உள்ளார். அதில் 

"எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க"  என கூறி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல் மந்திரி  பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெர்வித்து உள்ளார்.

அதில் "இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்" என கூறி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழில் பேசி  கவர்னர்  ஆர்.என்.ரவி! பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூரி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Next Story