புதுவையில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுவையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரி
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,511 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 3 பேர் புதுச்சேரியையும், 2 பேர் ஏனாமையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 10 பேர், வீடுகளில் 90 பேர் என 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 24 பேர் குணமடைந்தனர். நேற்று 244 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 1,174 பேர் 2-வது தவணை தடுப்பூசியையும், 74 பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 92 ஆயிரத்து 350 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
===
Related Tags :
Next Story