கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்ந்தனர்


கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 2 March 2022 12:47 AM IST (Updated: 2 March 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்ந்தனர்.

கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்ந்தனர்.

மாப்-அப் கலந்தாய்வு

புதுவை மாநிலத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சென்டாக் ஒட்டுமொத்த கலந்தாய்வு (மாப்-அப்) மார்ச் 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கலந்தாய்வு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. புதுவை மாநிலத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் கலந்துகொண்டனர். இந்த கலந்தாய்வு காலை 11 மணியளவில் முடிவடைந்தது.

631 இடங்கள்

தொடர்ந்து புதுவை மாநிலம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்தனர். அவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
முதல் நாளான நேற்று 296 இடங்கள் நிரம்பின. 631 இடங்கள் காலியாக உள்ளது. இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story