தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது


தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது
x
தினத்தந்தி 2 March 2022 11:09 AM IST (Updated: 2 March 2022 11:16 AM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும்  5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது .மேலும் நிதிநிலை அறிக்கை , வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.


Next Story