திசையன்விளை; பதவியேற்பு விழாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்...!


திசையன்விளை; பதவியேற்பு விழாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்...!
x
தினத்தந்தி 2 March 2022 1:26 PM IST (Updated: 2 March 2022 1:26 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதியேற்பு விழாவில் ஹெல்மெட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்.

திருநெல்வேலி,

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்வினை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 9 இடங்களையும், திமுக, காங்கிரஸ் தலா இரண்டு, பாஜக, தேமுதிக தலா ஒன்று மற்றும் சுயேச்சைகள் 3 பேரும் என வெற்றி பெற்றுள்ளனர். 

இந்த பேரூராட்சியில் பாஜக ஆதரவுடன் பேரூராட்சி தலைவர் பதியை அதிமுக கைப்பற்றி உள்ளது. 

இந்த நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு  திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பதிவியேற்பு விழாவுக்கு வந்த அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் 9 பேர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்தனர்.

இதனால் பதவியேற்பு விழா நடைபெறும் பேரூராட்சி அலுவகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், 

பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் அதிமுகவினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில்,  தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று  மிரட்டல் விடுத்துவந்தனர்.

மேலும் பதிவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் அ.தி.மு.க.வினர் மண்டையை  உடைப்போம் என்று கூறினர். இதனால் பாதுகாப்பு கருதி முன்னேற்பாடாக ஹெல்மெட் அணிந்து வந்துள்ளோம் என்று தெரிவித்தார். 

Next Story