4ஆம் தேதி எந்தெந்த இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு ??
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 4 ஆம் தேதி கடலூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின்னர் இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி நகரலாம் என்பதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story