இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சோகம்...!


இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சோகம்...!
x
தினத்தந்தி 2 March 2022 2:41 PM IST (Updated: 2 March 2022 2:41 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது36) இவரது மனைவி மல்லிகா(24). இந்த தம்பதிகளுக்கு  ஸ்ரீசரண்(7) என்ற மகன் உள்ளனர்.  இவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு இவர்கள் கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக காங்கேயம் ஊதியூர் கோவிலுக்கு கோபி தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் குள்ளம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பெட்ரோல் பங்கில் திரும்பும் போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. 

இந்த விபத்தில் கோபி மனைவி மல்லிகா மற்றும் மகன் ஸ்ரீசரண் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.  பின்னர் சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனைியல் சிகிச்சை பெற்று வந்த கணவன் மற்றும் மனைவி மல்லிகா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில மகன் ஸ்ரீசரண் மட்டும்  லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது. 


Next Story