குரூப்- 4 தேர்வுக்கு இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்


குரூப்- 4 தேர்வுக்கு இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
x
தினத்தந்தி 2 March 2022 4:31 PM IST (Updated: 2 March 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

குரூப்- 4 தேர்வுக்கு திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

ஓஎம்ஆர் சீட் மூலம் தேர்வு எழுதுவதால் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனிவரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் எந்த முறைகேடுகளும் 
நடைபெறாத வகையில் தடுக்கப்படும். அதே போல் குரூப் - 4 தேர்வுக்கு திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும்.

ஓஎம்ஆர் மற்றும் ஆதார் இணைப்புக்கான காலம் முடிவு அடைந்துவிட்டது.மீண்டும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.

Next Story