திருப்பத்தூர்; பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றிய டாக்டர்கள்...!
பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 45 வயது கொண்ட பெண்மணி ஒருவர் தீராத வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அவரை ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், அவர் வயிற்றில் பெரிய கட்டி இருப்பதை உறுதி செய்தனர். அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சை நிபுணர் நதீம் அஹ்மத் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தார். அப்போது அவர் வயிற்றில் இருந்த 20 செ.மீ விட்டம் கொண்ட 18 கிலோ எடை உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story