பசுபதிபாண்டியன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு..!


பசுபதிபாண்டியன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு..!
x
தினத்தந்தி 2 March 2022 7:34 PM IST (Updated: 2 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் பசுபதி பாண்டியன் கொலை வழக்கை அடுத்த மாதம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல், 

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். இவர் திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ்பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி, நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா உள்பட 5 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பசுபதிபாண்டியன் கொலை வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்படி இதுவரை 43 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று பசுபதிபாண்டியன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சுபாஷ் பண்ணையார் உள்பட 13 பேரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.


Next Story