கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது.
புதுச்சேரி
சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது.
தவக்காலம்
ஏசுநாதர் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களை அவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள்.
இந்த தவக்காலமானது சாம்பல் புதன் நாளில் தொடங்கும். அதன்படி நேற்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சிலுவை அடையாளம்
திருப்பலியில் பங்கேற்றவர்களின் நெற்றியில் அருட்தந்தைகள் சிலுவை அடையாளமிட்டனர். தவக்காலத்தின் உச்சகட்டமான புனிதவார நிகழ்வுகள் ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கிறது. அன்று குருத்தோலை ஞாயிறும், 15-ந்தேதி புனித வெள்ளியும், 17-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
காரைக்கால்
காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி சகாயமாதா ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களிலும் நேற்று சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தைகள், கடந்த ஆண்டு வழங்கிய குருத்தோலைகளை எரித்து, அதிலிருந்து கிடைத்த சாம்பலை பங்கு மக்கள் நெற்றியில் சிலுவைபோல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
Related Tags :
Next Story