பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்


பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 3 March 2022 12:32 AM IST (Updated: 3 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

பூமியான்பேட்டையில் பாலம் அமைக்கும் பணி நள்ளிரவில் மீண்டும் தொடங்கியது. இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.

பூமியான்பேட்டையில் பாலம் அமைக்கும் பணி நள்ளிரவில் மீண்டும் தொடங்கியது. இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
தேங்கும் மழைநீர்
புதுவையில் சிறு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் பூமியான்பேட்டை, பாவாணர் நகர் பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்குகிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மழைநீர் வழியும் வாய்க்காலில் புதுச்சேரி-வில்லியனூர் சாலை பூமியான்பேட்டை சந்திப்பில் உள்ள குண்டுசாலையில் பாலம் சிறிதாக உள்ளது. 
இதனால் மழைநீர் உள்வாங்க முடியாமல் தண்ணீர் தேங்குவதும் தொடர் மழையின் போது பாவாணர் நகர் பகுதியில் வடியாமல் நிற்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.66 லட்சம் செலவில் புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பூமியான்பேட்டை குண்டுசாலை சந்திப்பில் உள்ள தரைப்பாலத்தை பெரிய அளவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நவீன முறையில்  செயற்கையாக கான்கிரீட் பாலம் 7 துண்டுகளாக தயாரிக்கப்பட்டது.
மீண்டும் தொடக்கம்
இதையடுத்து பாலம் அமைப்பதற்காக கடந்த 27-ந் தேதி பூமியான்பேட்டை சந்திப்பில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பாலம் அமைக்கும் இடத்தில் அடித்தளம் அமைத்து செயற்கை கான்கிரீட் பாலத்தை பதிக்கும் பணி நடைபெற்றது. 
இந்த பணியில் 2 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டன. அதில் ஒரு கிரேன் திடீரென பழுதானதால் பாலம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு 11,30 மணிக்கு பிறகு பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ராட்சத கிரேன் உதவியுடன் கான்கிரீட் பாலத்தில் செயற்கை துண்டுகளை எடுத்து அடுக்கும் பணியை தொடங்கினர். நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் வாகனங்கள் அணிவகுத்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story