கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2022 12:28 PM IST (Updated: 3 March 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

குயவர் பாளையத்தில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை  மாவட்டம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). இவருடைய மனைவி லாவண்யா (34). கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவரும் மன வேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த இவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இது பற்றி அறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த கணவன் மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், முதல் கட்ட விசாரணையில் பங்கு சந்தை முதலீடு  தொடர்பான பிரச்சனையால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story