ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் - டிடிவி தினகரன் பேட்டி


ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் - டிடிவி தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2022 1:56 PM IST (Updated: 3 March 2022 1:56 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை,

சசிகலா அ.தி.மு.க.வின் தலைமையேற்க வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கோவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் அவர் கூறும் போது சசிகலா தலைமையேற்று டி.டி.வி. தினகரன் வழிநடத்தினால் அதிமுக  நல்ல நிலைக்கு வரும் என கூறினார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள வீட்டில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒரு மாவட்ட நிர்வாகிகள் மட்டும் சுயபரிசோதனை செய்து முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவினரும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அமமுக தொண்டர்களின் விருப்பப்படி தான் நான் முடிவெடுக்க முடியும். நாங்கள் தவறு செய்யவில்லை. சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் தான் அதிமுகவின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story